புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல், போலீசார் தீவிர விசாரணை
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. உடனே முதல்-அமைச்சர் வீட்டில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீடு உள்ளது.இவர் மத்திய அமைச்சராக இருந்தபோது கடந்த 29.1.2014 அன்று அவருடைய வீட்டின் அருகே சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு செல்லும் சாலையில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் (பேரிகார்டுகள்) போடப்பட்டது. மேலும் அவருடைய வீட்டில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஐ.ஆர்.பி.என். கமாண்டன்ட், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார், சிறப்புப்பிரிவு போலீசார் என்று 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுவை கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4 மணிக்கு டெலிபோனில் அழைப்பு வந்தது. அந்த போனை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் எடுத்து பேசினார். அப்பொழுது மறுமுனையில் பேசிய மர்ம நபர், ‘முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் முதல்-அமைச்சர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் முதல்-அமைச்சர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இந்த சோதனை நடைபெறும் சமயத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் இருந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு ஒரு திருமண விழாவிற்கு சென்றார்.
வெடிகுண்டு நிபுணர்கள், உள்ளூர் போலீசார் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். மேலும் அவருடைய வீட்டை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர் யார்? என விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அடுத்த சில நிமிடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், புதுவை பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை பபோலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே முதல்-அமைச்சர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வெடிகுண்டு நிபுணர்களில் ஒரு குழுவினர் புதுவை பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையிலும் எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போனில் பேசிய மர்ம நபர் யார்? என விசாரணை நடத்தினார்கள்.
அப்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கும், புதுவை பஸ் நிலையத்திலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி ஒரே எண்ணில் இருந்து பேசியது தெரியவந்தது. இந்த நிலையில் போனில் பேசிய மர்ம நபர் யார் என்பது தெரியவந்தது.மரக்காணம் அருகே உள்ள கூனிமேட்டை சேர்ந்த ஒரு வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story