முதல்-அமைச்சர் உத்தரவிட்டால் 50 அ.தி.மு.க. எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயார்
முதல்-அமைச்சர் உத்தரவிட்டால் 50 அ.தி.மு.க. எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயார் என்று, டி.ரத்தினவேல் எம்.பி. பேசினார்.
திருச்சி,
திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல் எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து ரத்தினவேல் எம்.பி. பேசியதாவது:-
வரலாறு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவிரி நீரை நமக்கு பெற்றுத்தருவதற்காக நீண்ட சட்ட போராட்டம் நடத்தினார். அதுமட்டுமல்லாமல் தனது உடலை வருத்தி 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய மந்திரி ஒருவர் நேரில் வந்து கேட்டுக்கொண்ட பின்னர் தான் உண்ணாவிரதத்தை முடித்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, தமிழகத்திற்கு கூடுதல் அரிசி ஒதுக்கும்படி கேட்டு உண்ணாவிரதம் இருந்தார். இது வரலாறு. எனவே உரிமைகளை பெறுவதற்காக அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதில் தவறு இல்லை.
ராஜினாமா செய்ய தயார்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி நாடாளுமன்ற மேலவையில் 13 அ.தி.மு.க. எம்.பி.க்களும் அவையை நடத்த விடாமல் செய்தோம். அதேபோல் மக்களவையில் உள்ள 37 எம்.பி.க்களும் 17 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்களா? என கேட்டுள்ளார். தி.மு.க. எம்.பி.க்களை முன்மாதிரியாக ராஜினாமா செய்ய சொல்லி விட்டு, அவர் இப்படி பேசி இருக்கலாம். முதல்-அமைச்சர் உத்தரவிட்டால் அ.தி.மு.க.வின் 50 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார்கள். எனவே வெளியில் இருப்பவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக விமர்சனம் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னுசாமி, அண்ணாவி, பூனாட்சி, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story