4 மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும்
4 மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஜோலார்பேட்டை,
கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து ரெயில் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார். இங்கு அவரை, ஜோலார்பேட்டை நகர பா.ஜ.க.தலைவர் அசோகன் தலைமையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஐஸ்வர்யா ஆசைதம்பி உள்பட பா.ஜ.க.வினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கூட்டத்தை மத்திய அரசு கடந்த 8-ந் தேதி கூட்டியது. அப்போது மாநில அரசுகள் தங்களது கருத்துகளை கூறவில்லை. இதனையடுத்து 18-ந் தேதி கர்நாடக அரசும், 23-ந் தேதி கேரள அரசும் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்தன. மத்திய அரசால் அப்போது முழுமையான கருத்து பெற முடியவில்லை. இதனால் கால அவகாசம் தேவை.
மத்திய அரசு இதனால் கால அவகாசம் கேட்டுள்ளது. மேலும் ‘ஸ்கீம்’ பற்றி தெளிவாக புரியவில்லை. ‘ஸ்கீம்’ பற்றி தமிழக அரசு ஒரு கருத்தும், கர்நாடக அரசு ஒரு கருத்தும் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை இந்த காலத்துக்குள் அமைக்காதது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. பா.ஜ.க. அரசு இதனை மீறியதாகவும் அமையாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமையும்
மேலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் தமிழகத்திற்கு தேவையற்றது. கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டு, கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு, முன்பு ஆண்ட தி.மு.க. ஆகியவற்றால் காவிரி தண்ணீர் பெற்றுத் தர முடியாது.
தமிழகத்திற்கு பா.ஜ.க. வால் மட்டும் தான் காவிரி தண்ணீர் பெற்றுத்தர முடியும். மேலும் புதுச்சேரி, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து ‘ஸ்கீம்’ பற்றியும் தெளிவான முடிவை பெற்று காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஜோலார்பேட்டை ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய மகளிர் அணி தலைவர் கல்யாணி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story