சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவையொட்டி ஏழுர் பல்லக்கு புறப்பாடு
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவையொட்டி நேற்று ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. இன்று பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
அய்யம்பேட்டை,
சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலின் இணைக்கோயிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமுமான சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் சப்தஸ்தான விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சப்தஸ்தான விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை அய்யம்பேட்டை சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாயகி அம்மனுடன் சக்கரவாகேஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் ஏழூர் பல்லக்கு புறப்பாடு தொடங்கியது. அப்போது கோவில் வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்லக்கு நேற்று அய்யம்பேட்டை எல்லை வரைச் சென்று பின்னர் மாகாளிபுரம், வழுத்தூர், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில், ஆகிய ஊர்களில் வலம் வந்தது.இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
இன்று(திங்கட்கிழமை) காலை இலுப்பக்கோரை சென்று மீண்டும் பசுபதிகோவிலை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து அய்யம்பேட்டை முக்கிய வீதிகளில் வலம் வருகிறது. கண்ணாடி பல்லக்கு மாலை அந்தந்த ஊர் பல்லக்குகளுடன் அய்யம்பேட்டை மதகடி பஜார் அழகுநாச்சியம்மன் கோவில் முன்பாக வந்தடைகிறது. அங்கு சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் பூப்போடும் நிகழ்ச்சி முடியும் வரை தஞ்சை கும்பகோணம் மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் திருவையாறு, கபிஸ்தலம், பாபநாசம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வாகனங்கள் பாபநாசம், கபிஸ்தலம், திருவையாறு வழியாகவும் இயக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story