ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம ஜீயரின் 13-வது நாள் நினைவு ஊர்வலம்


ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம ஜீயரின் 13-வது நாள் நினைவு ஊர்வலம்
x
தினத்தந்தி 2 April 2018 4:00 AM IST (Updated: 2 April 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம ஜீயரின் 13-வது நாள் நினைவு ஊர்வலம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயரான ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகர் சென்னையில் கடந்த 19-ந் தேதி உடல்குறைவால் காலமானார். இதை தொடர்ந்து அவரது உடல் சென்னையில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு அன்று இரவே கொண்டு வரப்பட்டு ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

பின்னர் 20-ந்தேதி காலை ஜீயர் உடல் மூங்கில் கூடைக்குள் வைக்கப்பட்டு மடத்தின் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் ஆசிரமத்தின் வழக்கப்படி 12 நாட்கள் தொடர்ந்து அவருக்கு சடங்குகள் நடைபெற்று வந்தன.

ஊர்வலம்

13-ம் நாளான நேற்று ஆசிரம வழக்கப்படி ஆசிரமத்தில் இருந்து மறைந்த ஜீயரின் உருவப்படத்தை யானை மீது வைத்து, ராமானுஜரின் சிலையை தோளில் சுமந்தும், ஆசிரமத்தினர் மற்றும் பக்தர்கள் கையில் கரும்பு ஏந்தியும், வேதங்களை சொல்லியபடி உத்திரவீதி, சித்திரை வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து மீண்டும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். 

Next Story