பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட போது கர்ப்பப்பை அகற்றம்: ஊர்க்காவல் படை முன்னாள் பெண் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
பிரசவத்துக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தனக்கே தெரியாமல் கர்ப்பப்பை அகற்றப்பட்டு விட்டதாக கூறி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊர்க்காவல்படை முன்னாள் பெண் ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சுமதி (வயது 25). இவர், ஊர்க்காவல் படையில் பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவர், பணியில் இருந்து விலகிக் கொண்டார். நேற்று இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு கலெக்டரின் கார் நிறுத்தும் பகுதிக்கு சென்ற அவர் தற்கொலை செய்வதற்காக திடீரென தான் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த சிலர் அவரை தடுத்து நிறுத்தினர். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் ஓடி வந்து சுமதியை தடுத்து நிறுத்தினர்.
தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நான் பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனக்கு குழந்தை இறந்து பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரசவம் நடந்த 2 நாட்கள் மயக்க நிலையில் இருந்த நான், மயக்கம் தெளிந்த போது, எனது கர்ப்பப்பை அகற்றப்பட்டு உள்ளதாக அறிந்தேன். கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் என்றும் கூறி எனது கணவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு, கர்ப்பப்பையை அகற்றியதாக அறிந்தேன். கர்ப்பப்பை அகற்றப்பட்டதால் தற்போது எனது கணவரும் என்னை பிரிந்து சென்று விட்டார். எனவே, எனது கணவருடன் என்னை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும். கர்ப்பப்பை அகற்றிய சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து அவரை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவருக்கு அறிவுரைகள் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story