கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுப்பு: கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளிக்காததை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகம்-புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் நாள்தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதேபோல் மத்திய அரசு மீது வழக்கு தொடர புதுவை அரசும் முடிவு செய்தது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் என்றால் கவர்னரின் அனுமதி பெற வேண்டும். எனவே புதுவை அரசு சார்பில் கவர்னரின் அனுமதியைகேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அரசு கொறடாவான அனந்தராமன் எம்.எல்.ஏ. மூலம் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியவந்தது.
இந்தநிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று பகல் 12-30 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு வந்தனர். கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட அவர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்காத கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கவர்னர் மாளிகையின் மெயின்கேட் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகையின் முன்பக்க பகுதியில் போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்குள் சென்ற அவர் அதிகாரிகளை சந்தித்துவிட்டு வந்து எம்.எல்.ஏ.க்களை பார்த்து கவர்னர் மாளிகைக்குள் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அதையும் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை 1-30 மணி அளவில் போலீசார் கைது செய்தனர். எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால் தமிழக அரசு மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் புதுவை அரசும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இதுதொடர்பாக புதுவை சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அரசு சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று முதல்-அமைச்சரும் கூறினார்.
ஆனால் இப்போது அதுதொடர்பான கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். இப்போது அரசு கொறடா அனந்தராமன் மூலம் வழக்கு தொடரப்போவதாக கூறுகிறார். அவர் தொடர்ந்து காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். மாநில உரிமையை காக்க தவறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டும்.
அதேபோல் கவர்னர் கிரண்பெடியும் மத்திய அரசுக்கு ஆதரவான நிலையில் உள்ளார். மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினையில் அவர் முட்டுக்கட்டையாக உள்ளார்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story