திருச்சியில் நாளை பொதுக்கூட்டம்: மேள தாளத்துடன் சென்று வியாபாரிகளுக்கு அழைப்பிதழ்
திருச்சியில் நாளை நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கட்சியினர் வியாபாரிகளுக்கு மேளதாளத்துடன் சென்று வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தனர்.
திருச்சி,
நடிகர் கமல்ஹாசன் புதிதாக தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நாளை (புதன்கிழமை) திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பல முக்கிய முடிவுகளையும் இந்த கூட்டத்தில் அறிவிக்க உள்ளார்.
வித்தியாசமான அழைப்பிதழ்
பொதுவாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு நோட்டீசு அச்சிட்டு வெளியிடுவது வழக்கம். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது. அந்த அழைப்பிதழில் கமல்ஹாசன் நடந்து வருவது போன்ற படத்துடன் ‘திருச்சியில் அரசியல் மாற்றத்திற்கான திருப்புமுனை, ஊழலை ஒழிக்க அனைவரும் ஒன்று கூடுவோம், நல்ல சமுதாயம் அமைக்க குடும்பத்துடன் வாருங்கள்... கரம் கொடுங்கள், களம் காண்போம்’ என்ற வாசகங்கள் இடம் பெற்று உள்ளது.
வெற்றிலை, பாக்கு வைத்து கொடுத்தனர்
இந்த அழைப்பிதழ்களை நேற்று மாலை திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினர் தங்கவேல் தலைமையில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், துணை செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட நிர்வாகிகள் மேள தாளத்துடன் சென்று வியாபாரிகளிடம் கொடுத்து பொதுக்கூட்டத்திற்கு வருமாறு அழைத்தனர். திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் அழைப்பிதழை வெற்றிலை, பாக்குடன் ஒரு தட்டில் வைத்து கொடுத்தனர்.

Related Tags :
Next Story