காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை,
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், இதற்காக போராட்டம் நடத்திய தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறையை அடுத்த மரவனூரில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
துறையூரில், ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் பஸ் மறியல் செய்தனர். இதில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, முத்துசெல்வன் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடியில், திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தமிழ்செல்வன் (வடக்கு), ரவிச்சந்திரன்(தெற்கு) ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் துரை மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் வைரமணி, மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களை லால்குடி போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டையில், துறையூர்-நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
முசிறி கைகாட்டியில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட நகர செயலாளர் சிவக்குமார், தலைமைக்கழக பேச்சாளர் தமிழ்மன்னன் உள்பட 35 பேரை முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கைது செய்தார்.
திருவெறும்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, கூத்தைப்பார் பேரூர் செயலாளர் செல்வராஜ், கட்சி நிர்வாகி வி.பி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 55 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூரில், எதுமலை பிரிவு சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி உள்பட 35 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.

Related Tags :
Next Story