டேங்கர் லாரி ஓட்டலுக்குள் புகுந்தது: ஒருவர் காயம் டிரைவர் கைது
மணலியை அடுத்த மாத்தூர் பகுதியில் இருந்து தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி. ஆயில் நிறுவனத்திற்கு ஆயில் நிரப்ப டேங்கர் லாரி ஒன்று நேற்று அதிகாலை சென்றது.
திருவொற்றியூர்,
இந்த லாரி மணலி காமராஜர் சாலையில் உள்ள மீனாட்சி தியேட்டர் அருகே வந்தபோது எதிரில் உள்ள ஓட்டலுக்குள் புகுந்தது.
அப்போது ஓட்டலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணன் (வயது 64) என்ற முதியவர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். லாரி மோதியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட் கள் நசுங்கியது. அதிகாலை வேளை என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறவில்லை.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுவாமிதாஸ் (63) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story