பாலியல் கொடுமை தந்தையின் கள்ளக்காதலி கைது


பாலியல் கொடுமை தந்தையின் கள்ளக்காதலி கைது
x
தினத்தந்தி 3 April 2018 4:53 AM IST (Updated: 3 April 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

5 வயது சிறுமியை கடத்தி பாலியல் கொடுமை செய்த தந்தையின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

மும்பை மகாலட்சுமி கோவில் அருகில் உள்ள ஒரு கடை அருகில் சம்பவத்தன்று 5 வயது சிறுமி ஒருத்தி மயங்கி கிடந்தாள். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த காம்தேவி போலீஸ் நிலைய போலீஸ்காரர் ஒருவர் அவளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளினிக்கில் சேர்த்தார்.

அங்குள்ள டாக்டர் சிறுமியை பரிசோதித்து விட்டு அவள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

பின்னர் சிறுமி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

அவளது சட்டைபையில் பள்ளி அடையாள அட்டை இருந்தது. இதன் மூலம் சிறுமி பால்கர் மாவட்டம் அர்னாலாவை சேர்ந்தவள் என்பது தெரியவந்தது. அதில் இருந்த சிறுமியின் பெற்றோரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு சம்பவத்தை போலீஸ்காரர் கூறினார்.

உடனே அவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மகளை காணவில்லை என அர்னாலா போலீசில் புகார் கொடுத்து இருந்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து அர்னாலா போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் சிறுமியை கடத்தியது ஜோதி காம்பிளே என்ற பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

சிறுமியின் தந்தைக்கும், ஜோதி காம்பிளேவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதன் காரணமாக ஜோதி காம்பிளே இரண்டு முறை கர்ப்பமாகி அதை கலைத்து உள்ளார். ஆனால் சிறுமியின் தந்தை அவரை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது.

இதற்கு பழிவாங்க திட்டமிட்டு, அவரது மகளை மும்பைக்கு கடத்தி வந்து ஜோதி காம்பிளே அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதை தாங்க முடியாமல் சிறுமி மயங்கி விழுந்து இருக்கிறாள். இதன் பின்னர் அவளை மகாலட்சுமி கோவில் பகுதியில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

Next Story