அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 3:30 AM IST (Updated: 4 April 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து கூட்டுறவு துரை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்,

கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தேர்தலில் முறைகேடுகளை கண்டித்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமொழி, கூட்டுறவுத்துறை முன்னாள் மாவட்ட செயலாளர் கங்காதரன், தமிழ்நாடு கருவூல கணக்கு துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோர் பேசினர்.

கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தேர்தல் முறைகேடுகள் செய்திட அச்சுறுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும், கன்னியாகுமரி மண்டல இளநிலை உதவியாளர் சுபாஷ், மண்டல இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா, சிவகங்கை கூட்டுறவு சார் பதிவாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட கூட்டுறவு அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கலெக்டரை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும், வட்டார அளவில் பொது வேட்பு மனு ஏற்பு மையம், பொது வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க வேண்டும், தேர்தல் அலுவலருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும், தேர்தல் பணியில் இதர துறை ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story