கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வேட்பு மனுவை பரிசீலனை செய்ய அதிகாரி வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேளாங்கண்ணியில், கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வேட்புமனுவை பரிசீலனை செய்ய அதிகாரி வராததை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கான தேர்தலை நடத்த தமிழக அரசு அறிவித்தது. அதைதொடர்ந்து தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கான தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருசில கூட்டுறவு வங்கிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி நடைபெற்றது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து காலை சுமார் 11 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கூட்டுறவு வங்கிக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் வேட்புமனுவை பரிசீலனை செய்ய தேர்தல் அதிகாரி வரவில்லை. இருப்பினும் மனுதாரர்கள் மாலை 4 மணிவரை அங்கு காத்திருந்தனர். ஆனால் தேர்தல் அதிகாரி வரவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து வேட்பு மனுவை பரிசீலனை செய்ய அதிகாரி வராததை கண்டித்து கூட்டுறவு வங்கி முன்பு பா.ஜ.க.வினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் குமணன் தலைமை தாங்கினார். வேட்பு மனுவை பரிசீலனை செய்ய வராத தேர்தல் அதிகாரியை கண்டித்தும், தேர்தலை நியாயமாக நடத்தக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story