கன்னியாகுமரியில் 50 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி ஆய்வு செய்த கலெக்டர்


கன்னியாகுமரியில் 50 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் 50 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது கலெக்டர் ஏறி ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான அரசு பழத்தோட்டம் அமைந்துள்ளது. அந்த பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் 15 ஏக்கர் பரப்பளவில் சுற்றுசூழல் பூங்கா அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். தற்போது இங்கு செயற்கை நீர் ஊற்று, நீர் வீழ்ச்சி, அரண்மனை போன்ற நுழைவு வாயில், தடாகம், சிறுவர் பூங்கா, பூந்தோட்டம், மூங்கில் பூங்கா உள்பட பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றுச்சூழல் பூங்காவை இன்று (புதன்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இதையொட்டி குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று பழத்தோட்டதுக்கு சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த 50 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது ஏணி வழியாக ஏறி சென்றார். குடிநீர் தொட்டியின் உச்சியை அடைந்த அவர் கன்னியாகுமரியின் அழகு தெரிவதை பார்த்து ரசித்தார்.

அதன்பிறகு கீழே இறங்கி வந்த அவர், குடிநீர் தொட்டியின் மீது காட்சிகோபுரம் அமைப்பது பற்றி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இங்கு பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் அமைக்கவும் ஆலோசனை வழங்கினார்.

கலெக்டருடன் தோட்டக்கலை துணை இயக்குனர் அசோக்மேக்கரின், உதவி இயக்குனர் ஷீலா ஜான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணபாலன், தோட்டக்கலை அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

Next Story