காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மாவட்டத்தில் 90 சதவீதம் கடைகள் அடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மாவட்டத்தில் 90 சதவீதம் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இதில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.

வர்த்தகம் பாதிப்பு

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கேசவன் கூறுகையில், கடைகள், மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Next Story