தலைமை தேர்தல் கமிஷனர் இன்று கர்நாடகம் வருகை


தலைமை தேர்தல் கமிஷனர் இன்று கர்நாடகம் வருகை
x
தினத்தந்தி 4 April 2018 2:36 AM IST (Updated: 4 April 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று(புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் 3 நாட்கள் கர்நாடகத்தில் தங்கி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கான நாள் நெருங்கி வருவதால், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று(புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவருடன் தேர்தல் கமிஷனர்களும் வருகிறார்கள். அவர்கள் 6-ந் தேதி வரை அதாவது 3 நாட்கள் கர்நாடகத்தில் தங்கி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

பெங்களூருவில் இன்று தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்பட உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவரங்களை அவர் கேட்டு பெறுகிறார்.

வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள், அங்கு செய்யப்படும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தலில் முறைகேடுகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. 

Next Story