வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை: 40 பேர் கைது


வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை: 40 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுவை தெய்வநாயகம் பிள்ளை தோட்டத்தில் உள்ள மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். அதன்படி நேற்று அவர்கள் காந்தி வீதியில் கூடினார்கள். அங்கிருந்து வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க மாநில பாசறை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்த்தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். வருமான வரித்துறை அலுவலகம் முன்பு ஊர்வலம் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடுப்புகளை தள்ளியபடி சென்ற அவர்கள் அலுவலக வாசலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 40 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story