வான்கடே மைதானத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்
வான்கடே மைதானத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டுேதாறும் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு மராட்டியத்தில் கடும் வறட்சி நிலவியபோது, வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டிக்காக மைதானத்தை பராமரிக்க வறட்சி சூழ்நிலையிலும் அதிக தண்ணீர் வீணடிக்கப்படுவதாக மும்பை ஐகோர்ட்டில் ஒருவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டை வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதனால் இறுதிப்போட்டியை மும்பையில் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த வழக்கு மீண்டும் மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஓகா, ரியாஸ் சாக்லா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக வான்கடே மைதானத்தை பராமரிக்க மாநகராட்சி சார்பில் கூடுதல் தண்ணீர் வழங்கப்படாது என்றும், கடந்த 3 ஆண்டுகளாக வான்கடே மைதானத்திற்கு கூடுதல் தண்ணீரில் வழங்கப்படவில்லை என்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது.அப்போது நீதிபதிகள், வருங்காலங்களிலும் வான்கடே மைதானத்துக்கு இதுபோன்ற தண்ணீர் சலுகை வழங்கப்படாதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Related Tags :
Next Story