சமூக வலைத்தளத்தில் வெளியான காட்சி: லாரி டிரைவரிடம் ரூ.100 லஞ்சம்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
சமூக வலைத்தளத்தில் வெளியான காட்சி மூலம் லாரி டிரைவரிடம் ரூ.100 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலபாக்கம் போன்ற பகுதிகளில் லாரி மற்றும் தண்ணீர் கேன்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நிறுத்தி பணம் கேட்பதாக புகார்கள் வந்தன.
இதற்கிடையில் சித்தாலபாக்கம் பகுதியில் தண்ணீர் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி அதன் டிரைவரிடம் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ரூ.100 லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின.
அதில், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஒரு லாரி டிரைவரிடம் பணம் கேட்பார். அதற்கு அவர், ரூ.40 கொடுக்கிறார். அங்கு வரும் மற்றொரு டிரைவர் ரூ.50 தருகிறார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ரூ.100 தந்தால்தான் லாரி இங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்று கூறுகிறார். இந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி போக்குவரத்து போலீசார் தரப்பில் விசாரித்தபோது, இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகவும், இது பற்றி போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து துறைரீதியான நடவடிக்கையாக டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் எனவும் தெரிவித் தனர்.

Related Tags :
Next Story