குடும்ப தகராறில் தாக்க முயற்சி: 11-வது மாடியில் இருந்து விழுந்து பெண் சாவு கணவர் கைது
குடும்ப தகராறில் கணவர் தாக்க முயன்றதால் 11-வது மாடியில் இருந்து விழுந்த பெண் உடல் சிதறி இறந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர்,
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ராஜ்கண் (வயது 37). கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கொரட்டூரை சேர்ந்த ஜெயசுதாவுக்கும் (31) சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜெயசுதா, கொரட்டூர் ஏரிக்கரை சாலையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜ்கண், மனைவியை பார்க்க கொரட்டூர் வந்தார். அப்போது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் ஜெயசுதா கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்று கூறினார்.
இதையடுத்து மனைவியை அடுக்குமாடி குடியிருப்பின் 11 மாடியான மொட்டை மாடிக்கு இரவில் அழைத்து சென்று ராஜ்கண் மீண்டும் சமாதானம் பேசினார். வாக்குவாதம் முற்றியதால் ராஜ்கண், மனைவியை தாக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அவரிடம் இருந்து ஒதுங்க முயன்ற ஜெயசுதா 11 மாடியில் இருந்து கீழே விழுந்து உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார் அங்கு விரைந்து சென்று ஜெயசுதாவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவியின் சாவுக்கு காரணமான ராஜ்கண் கைது செய்யப்பட்டார்.

Related Tags :
Next Story