திற்பரப்பு அருவி- மாத்தூர் தொட்டி பாலத்தில் கலெக்டர் ஆய்வு


திற்பரப்பு அருவி- மாத்தூர் தொட்டி பாலத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே திடீர் ஆய்வு செய்தார்.

திருவட்டார்,

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று மேற்கு மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றார். பின்னர், அவர் கோவில் கட்டுப்பாட்டின்படி மேலாடை அணியாமல் சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை பார்வையிட்டார். மேலும் பக்தர்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொட்டிப்பாலம்-திற்பரப்பு

அதைத்தொடர்ந்து ஆசியாவின் மிகநீளமான மாத்தூர் தொட்டிப்பாலத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், திற்பரப்பு அருவிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு திற்பரப்பு அருவியின் சீசன் பற்றியும், தண்ணீர் வரத்து குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கலெக்டருடன், உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், பேரூராட்சி இணை இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ், கல்குளம் தாசில்தார் ராஜா ஆகியோர் சென்றனர். 

Next Story