மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ரெயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சோழவந்தானில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
திருமங்கலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருமங்கலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட தேவர்சிலை அருகே இருந்து மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் அந்த கட்சியினர் புறப்பட்டனர். ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி வந்த அவர்களை போலீசார் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாரை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அதே இடத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியல் செய்த 15 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சோழவந்தான் ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவர்களை சோழவந்தான் போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி ஜெயக்கொடி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஜோதிராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story