காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் அக்னி தீர்த்த கடலில் இறங்கி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜெயராஜ், ரமணி, பாபு, ஜார்ஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story