காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெல்லையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெல்லையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நெல்லையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக தி.மு.க. கூட்டணி கட்சியினர் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமதுஅலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உஸ்மான்கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, சரவணன், பகுதி செயலாளர் பூக்கடை அண்ணாத்துரை, சீனியம்மாள், ஆவின் ஆறுமுகம், போர்வெல் கணேசன், ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வானமாமலை, மண்டல தலைவர் தனசிங்பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயலாளர் கடாபி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் சுல்தான், செய்தி தொடர்பாளர் ஜாபர் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்து, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், வனசுந்தர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆலங்குளத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பூங்கோதை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் நெல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கசெல்வம், மாவட்ட பீடி தொழிலாளர் சங்க செயலாளர் ராஜாங்கம், மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரிவண்ணமுத்து, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர் போராட்டமாக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டினத்தில் தி.மு.க. சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக பூங்கோதை எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Next Story