கைவிலங்குடன் அழைத்து வந்ததால் தூக்கு தண்டனை கைதி தஷ்வந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ரகளை
செங்கல்பட்டு கோர்ட்டில் தூக்கு தண்டனை கைதி தஷ்வந்த் ரகளையில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (வயது 35). இவரது மகள் ஹாசினி (6). கடந்த ஆண்டு அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் (24) என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து அவரது உடலை எரித்தார். தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், செலவுக்கு பணம் தராததால் தன்னுடைய தாய் சரளாவை கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த நகையை எடுத்துக்கொண்டு மும்பை சென்று தலைமறைவானார்.
இதையடுத்து குன்றத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து தஷ்வந்தை மும்பையில் வைத்து கைது செய்தனர். ஹாசினியை கொலை செய்த குற்றத்திற்காக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தஷ்வந்த் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தனக்கு எதிராக சாட்சி கூறினால் தன்னை கொலை செய்துவிடுவதாக தஷ்வந்த் மிரட்டுவதாக ஹாசினியின் தந்தை செங்கல்பட்டு டவுன் போலீசில் அப்போது புகார் செய்திருந்தார்.
அந்த வழக்கு நேற்று செங்கல்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தஷ்வந்தை சென்னை புழல் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைத்து வந்தனர்.
கையில் விலங்குடன் கோர்ட்டு வாசல்படி வரை போலீசார் அழைத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த தஷ்வந்த் கோர்ட்டுக்குள் என்னை எப்படி நீங்கள் கைவிலங்குடன் அழைத்து வரலாம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை போலீசார் பொருட்படுத்தாததால் மேலும் ஆவேசம் அடைந்த தஷ்வந்த் போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டார்.
பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த தஷ்வந்தின் கைவிலங்கை போலீசார் அவிழ்த்த போது அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஓடிச்சென்று முறையிட்டார். தஷ்வந்தை மாஜிஸ்திரேட்டு எச்சரித்து வழக்கு விசாரணையை இந்த மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
பெரும்பாலும் கோர்ட்டு வளாகத்திற்குள் நுழையும் போதே கைதிகளின் கைவிலங்கை அவிழ்த்து விடுவோம். சில கைதிகளை கைவிலங்கு போடாமல் பக்கத்திலேயே அமர வைத்து கோர்ட்டுக்கு அழைத்து வருவோம் தஷ்வந்தை பொறுத்த மட்டில் அவர் ஏற்கனவே மும்பையில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடியவர். மேலும் அவர் தூக்கு தண்டனை கைதி. அதனால் பாதுகாப்பு கருதி அவரை பத்திரமாக கொண்டு செல்லும் நிலை. ஆகவே தான் அவரை கைவிலங்குடன் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Tags :
Next Story