இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்: 66 பேர் கைது


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்: 66 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 4:30 AM IST (Updated: 5 April 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காரைக்காலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால்,

காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காரைக்காலில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காரைக்கால் ரெயில் நிலையத்தில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்று திரண்டு, மதியம் 12.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.

இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராமமூர்த்தி, தமிழழகன் உள்பட 66 பேர் கைது செய்யப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Next Story