விமான பணிப்பெண் மானபங்கம் நடிகரின் உறவினர் மீது வழக்குப்பதிவு
விமான பணிப்பெண் மானபங்கம் செய்த நடிகரின் உறவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்ககொடுத்து, விமான பணிப்பெண்ணை மானபங்கம் செய்த நடிகரின் உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை சாந்தாகுருஸ் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அமித் கில். இவர், இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலின் மைத்துனர் ஆவார். அமித் கில் தனக்கு தெரிந்த வெர்சோவா பகுதியை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவரிடம், தன்னிடம் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.
அதன்பேரில் விமான பணிப்பெண் அவரிடம் ரூ.18 லட்சம் முதலீடு செய்தார். இந்தநிலையில், அவர் வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டிய பணத்திற்காக காசோலைகள் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த காசோலைகள் பணம் இன்றி திரும்பி உள்ளன.
இந்தநிலையில், அமித் கில் ரூ.12 லட்சத்தை கொடுத்து விட்டார். மீதி ரூ.6 லட்சத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். அந்த பணத்தை தரும்படி அவரை விமான பணிப்பெண் வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு சாந்தாகுருசில் உள்ள தனது வீட்டுக்கு வரும்படி விமான பணிப்பெண்ணை அமித் கில் அழைத்து உள்ளார்.
அதன்பேரில், அங்கு சென்ற அந்த விமான பணிப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதை குடித்துவிட்டு மயங்கியதும் அமித் கில் அந்த பெண்ணை மானபங்கம் செய்து அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்.
அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்ததும், தன்னிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால் ஆபாச வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அமித் கில் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story