இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை
இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்தால், அவர் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்கிறார்கள், எரித்ரியா மக்கள்.
இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் என்பது குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது. முறையான விவாகரத்து இன்றி இரண்டாவது திருமணத்திற்கு தயாரானால், நீதிமன்ற வழக்கு, சிறை தண்டனை... என பல சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் எரித்ரியா நாடு, இரண்டாவது திருமண விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனெனில் அங்கு இரண்டாவது திருமணம் செய்யாதிருப்பதுதான் பெரும் குற்றமாம். அதனால் ஒருவர் இரண்டாவது திருமணம் முடித்துக்கொள்ளாமல் இருந்தால், அவர் நிச்சயம் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்கிறார்கள், எரித்ரியா மக்கள்.
எதற்காக இந்த சட்டம் என்கிறீர்களா...? அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. எரித்ரியா நாட்டில் அடிக்கடி போர்கள் நடக்குமாம். அதில் பங்கேற்கும் ஆண்கள் கொத்து கொத்தாக மடிந்துபோக, அங்கு ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட வெகு குறைவாகவே இருக்கிறது. இதை சமாளிப்பதற்காகவே ஆண்களுக்கு இரண்டாவது திருமணம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆண் மறுத்தாலும், முதல் மனைவி மறுத்தாலும்... அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுமாம். அதேபோல் ஒரு ஆண் இரண்டு பெண்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story