‘கட்டிப்பிடி’ உணவகம்


‘கட்டிப்பிடி’ உணவகம்
x
தினத்தந்தி 6 April 2018 4:45 AM IST (Updated: 5 April 2018 1:35 PM IST)
t-max-icont-min-icon

உணவு விடுதியில் காலை, மதிய உணவுகளுடன் கட்டிப்பிடி வைத்தியமும் செய்யப்படுகிறது.

மெரிக்காவில் வசிக்கும் டிம் ஹாரிஸ் என்பவர்தான் இந்த நட்பு விடுதிக்குச் சொந்தக்காரர். 2010-ம் ஆண்டிலிருந்து இந்த உணவு விடுதியை நடத்தி வருகிறார். இதுவரை 24 ஆயிரம் கட்டிப்பிடிகளை நிகழ்த்தியிருக்கிறார்.

‘‘கலோரி இல்லாத, சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய ஒரே மெனு கட்டிப்பிடித்தல்தான். இங்கே சாப்பிட வருகிறவர்களுக்கு இலவசமாக இந்தச் சேவையை அளிக்கிறேன். இதன் மூலம் எனக்கும் மகிழ்ச்சி, என் வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி’’ என்கிறார் டிம்.

அமெரிக்காவிலேயே டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட ஒருவர் நடத்தும் உணவு விடுதி இதுதான். 26 வயது டிம் உணவு விடுதியை நடத்துவதுடன் பல்வேறு திறமைகளையும் பெற்றிருக்கிறார்.

நன்றாகப் படகு செலுத்துவார், பிரமாதமாக மீன் பிடிப்பார். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றிருக்கிறார். ‘‘என் குறை தெரியாமல் வளர்த்து, பல திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய என் தந்தைதான் என் ரோல் மாடல்’’ என்கிறார் டிம். இந்த உணவு விடுதியில் சிறப்புக் குழந்தைகளுக்கும், அவர் களது பெற்றோருக்கும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன. 

Next Story