நாற்காலிகள் வரலாறு


நாற்காலிகள் வரலாறு
x
தினத்தந்தி 6 April 2018 5:00 AM IST (Updated: 5 April 2018 1:37 PM IST)
t-max-icont-min-icon

பழமையான எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விழாக்கள், சடங்குகளில் முதுகுப் பகுதி உயர்ந்த நாற்காலிகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். அதற்கு முன்புவரை சாய்மானம் கொண்ட இருக்கைகள் இல்லை. அனைத்தும ஸ்டூல்கள் போலவே இருந்துள்ளன.

சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட நாற்காலிகள் 1725-ல் தோன்றியது. இவற்றை ‘ராக்கோகோ ஸ்டைல்’ நாற்காலிகள் என அழைத்தனர். ஆடும் சாய்வு நாற்காலிகள் அட்லாண்டிக் கடற்கரை தேசங்களில் இதே காலத்தில் தோன்றின. இங்கிலாந்தில் 1830-ல் உலோக நாற்காலிகள் உருவாகின. 1840களில் வளைந்த மரப்பலகைகள் கொண்ட நாற்காலிகளும், ஜெர்மனியில் 1860 ஆண்டு வாக்கில் மென்பூச்சு வேலைப்பாடு கொண்ட நாற்காலிகளும் தோன்றின. பல வண்ணங்களில், விதவிதமான வடிவங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகள் செய்யும் வழக்கம் 1960-ல் தோன்றியது. 1967 முதல் பிளாஸ்டிக் நாற்காலி கம்பெனிகள் உற்பத்தியைத் தொடங்கின. 

Next Story