காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல்


காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2018 3:45 AM IST (Updated: 6 April 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டது.

செங்குன்றம்,

சென்னை போதைப்பொருள் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தலைமை காவலர்கள் ரவிச்சந்திரன், சிவகுமார் ஆகியோர் ஆந்திர மாநில எல்லையான ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தும்படி சைகை காண்பித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல், தடுப்பு சுவரில் மோதியதுடன் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை விரட்டிச் சென்று செங்குன்றம்-பாடியநல்லூர் சோதனை சாவடி பகுதியில் மடக்கி பிடித்தனர்.

தலைமை காவலர் ரவிச்சந்திரன், அந்த கார் கண்ணாடியை உடைத்து டிரைவரை கைது செய்ய முயன்றார். அப்போது காரில் இருந்த 2 பேர் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காரை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 18 மூட்டைகளில் 400 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு போலீசார், தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story