தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்
முழு அடைப்பு போராட்டத்தின்போது திருபுவனை, அரியாங்குப்பத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 240 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருபுவனை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் புதுவை மாநிலத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் புறநகர் பகுதிகளான திருபுவனை, திருக்கனூர், திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
அரசு, தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. முக்கிய சாலைகள், கடைவீதிகள், மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி - விழுப்புரம், புதுச்சேரி - கடலூர் வழித்தடங்களில் குறைவான எண்ணிக்கையில் தமிழக அரசு பஸ்கள் ஓடின. திருபுவனை, திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு ஆகிய 3 இடங்களில் மாநில தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் (வடக்கு) காந்தி தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, பிரதாபன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார், சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர், முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அரியாங்குப்பம் போலீசார், மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 104 பேரை கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
வில்லியனூர் பகுதியில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.
பாகூர் தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் 34 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 240 பேரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story