தாரமங்கலம், ஆத்தூரில் 4 பஸ்களின் கண்ணாடி உடைப்பு
தாரமங்கலம், ஆத்தூர் பகுதிகளில் நேற்று 4 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.
சேலம்,
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சேலத்தில் இருந்து தாரமங்கலம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சீராய்கடை பஸ்நிறுத்தத்தில் மர்ம நபர்கள் அந்த பஸ்சை வழிமறித்து இரண்டு பக்க கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். இதன்பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற அரசு பஸ் ஒன்றையும், பவளத்தானூரில் சென்ற அரசு பஸ் ஒன்றின் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் 3 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தன.
ஆத்தூர்
சங்ககிரி டெப்போவை சேர்ந்த அரசு பஸ் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் அருகே ஓட்டம்பாறை என்ற இடம் அருகே பஸ் வந்தபோது தி.மு.க. கூட்டணி கட்சியினர் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. உடனே பஸ் டிரைவர் வண்டியை நிறுத்தினார். பின்னர் புறவழிச்சாலை வழியாக பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ் மீது கல்வீசியது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story