சேலம் குகையில் உள்ள தபால் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சேலம் குகையில் உள்ள தபால் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் குகை கே.எஸ்.தியேட்டர் அருகே தெற்கு தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த குண்டு தபால் நிலைய வாசல் பகுதியில் விழுந்து வெடித்தது. குண்டு விழுந்த இடம் கருகிய நிலையில் காணப்பட்டது. குண்டு வீசப்பட்ட நேரம் அதிகாலை வேளை என்பதால் தபால் நிலையமும் மூடப்பட்டிருந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் தபால் நிலையத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மது பாட்டில் ஒன்றில் மண்எண்ணெய் நிரப்பி மர்ம ஆசாமிகள் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டால் கட்டிடம் சேதமாகி இருக்கும் என்றனர்.
கண்காணிப்பு கேமரா
தபால் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து அருகில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என போலீசார் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, தபால் நிலையம் முன்பு நேற்று முதல் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீதான எதிர்ப்பை காட்டும் வகையில் மர்ம நபர்கள் யாரோ சிலர், தபால் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story