பிளாஸ்டிக் பொருட்கள் தடையில் இருந்து சிறிய பாட்டில்களுக்கு விலக்கு
மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து சிறிய பாட்டில்களுக்கு விலக்கு அளிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மராத்தி புத்தாண்டு தினம் முதல் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இதன்படி பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், டம்ளர்கள், கரண்டிகள், அரை லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட சிறிய வகை பிளாஸ்டிக் பாட்டில்கள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி விட்டு வீசப்படும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டன.
இந்தநிலையில், அரை லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. அதே நேரத்தில் அந்த வகை பாட்டில்களை உடனடியாக அழிக்கும் எந்திரங்களை மாநிலம் முழுவதும் நட்சத்திர ஓட்டல்கள், வ ணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக கால அவகாசத்தையும் மாநில அரசு மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.
இதன்படி ஜூன் 23-ந்தேதி வரை அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் தொடர்பான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

Related Tags :
Next Story