“திறமையை வளர்த்து நம்பிக்கையுடன் பயணித்தால் வாழ்வில் சாதிக்கலாம்”
திறமையை வளர்த்து நம்பிக்கையுடன் பயணித்தால் வாழ்வில் சாதிக்கலாம் என்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் எட்வின் ஞானதாஸ் தலைமை தாங்கி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். துணை முதல்வர் ரஷி வரவேற்றார். விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-
கல்லூரி பருவத்தில் ஆண்டு விழா என்பது மிகவும் முக்கியமானது. 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த நினைவுகள் மறக்காது. மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த மண்ணில் சாமானியர்கள் அதிகம் சாதித்து இருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஜனாதிபதியானவர் அப்துல்கலாம் மற்றும் இஸ்ரோ தலைவராக உள்ள சிவனும் சாமானியர் தான். எனவே தான் சாமானியர்கள் சாதிக்கிறார்கள் என்று சொல்கிறேன்.
ஆனால் எப்படி சாதிப்பது என்பது எல்லோருக்கும் கேள்விக்குறியாகவே இருக்கும். இறை நம்பிக்கை அவசியம் தான். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இறை நம்பிக்கை வேண்டும். அதோடு கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பு இருந்தால் யாராலும் சாதிக்க முடியும்.
திறமை என்பது நமக்குள் திடீரென வந்து விடாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும். திறமையை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடியும் என்று நம்பிக்கையுடன் பயணித்தால் கட்டாயம் வாழ்வில் சாதிக்கலாம். 125 ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் அதிக கல்வி நிறுவனங்கள் கிடையாது. ஆனால் அப்போதே ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உருவாக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு கல்வியை வழங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது ஏராளமான கல்வி நிறுவனங்கள் வந்துவிட்டன. கல்வி கற்போரும் அதிகரித்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் துணை முதல்வர் ராபர்ட் விக்டர் எட்வர்ட் நன்றி கூறினார். ஜாக்குலின், போதகர் செலின் தங்ககுமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவி கள் திரளாக கலந்து கொண்டனர்.
கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) பட்டமளிப்பு விழா நடக்கிறது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

Related Tags :
Next Story