காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருமான வரி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருமான வரி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்
x
தினத்தந்தி 7 April 2018 3:00 AM IST (Updated: 7 April 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வருமானவரி அலுவலகத்திற்கு பூட்டு போடுவதற்காக அலுவலகம் நோக்கி நகர்ந்தனர்.

விருதுநகர்,

விருதுநகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருமான வரி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் வருமான வரி அலுவலகம் முன்பு கூடினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக்கூறி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வருமானவரி அலுவலகத்திற்கு பூட்டு போடுவதற்காக அலுவலகம் நோக்கி நகர்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர். 

Next Story