சிவகாசி அருகே, 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் கருகி சாவு
சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் பெண் உள்பட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ராமுத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான இவருக்கு அதே பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு தயாரான பட்டாசுகளை குடோனில் இருந்து வேனில் ஏற்றும் பணி நேற்று காலை நடந்தது. காலை 10.45 மணி அளவில் வேனில் பட்டாசுகளை ஏற்றியபோது ஒரு பண்டல் தவறி கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. சிதறல்கள் மற்ற பண்டல்கள் மீது விழுந்ததால் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.
இதில் பட்டாசுகளை வேனில் ஏற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள், ஏ.லட்சுமியாபுரத்தை சேர்ந்த சேகர் (வயது38), ஆலங்குளம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த ரவி (48) ஆகியோர் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள். மேலும் குள்ளாய்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (34), இருளப்பன்நகரை சேர்ந்த பழனிச்சாமி (40) ஆகியோர் உடல் கருகினர். தீக்காயங்களுடன் இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பட்டாசு ஏற்றிய வேனிலும் தீப்பற்றியது. அந்த வேனும் நாசமானது.
தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.
சம்பவ இடத்தை வெம்பக்கோட்டை தாசில்தார் ராஜ்குமார் பார்வையிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்து நிகழ்ந்த சில மணி நேரத்தில் அங்கிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிர்கோட்டை கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரது பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது.
இங்கு 6 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஒரு அறையில் மாரனேரியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) என்பவரும் தெய்வானை என்ற பெண் தொழிலாளியும் தரைச்சக்கரம் தயாரித்துக்கொண்டிருந்தனர். அங்கு ஏற்பட்ட தீவிபத்தில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. சிவகாசி தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயைஅணைத்தார்கள்.
மாவட்ட வருவாய் அதிகாரி ஆனந்தகுமார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இதே பகுதியில் உள்ள சத்திரம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில் நேற்று இரு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story