தேவகோட்டை அருகே தற்கொலை செய்த மாணவியின் உடல் எரிப்பு, பெற்றோர் மீது வழக்கு


தேவகோட்டை அருகே தற்கொலை செய்த மாணவியின் உடல் எரிப்பு, பெற்றோர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 April 2018 3:15 AM IST (Updated: 7 April 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே தற்கொலை செய்த மாணவியின் உடலை பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது அரையனி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்துள்ளார். பின்னர் அவரை தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்ற அந்த கல்லூரி மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் இத்தகவல் தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் அந்த மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்து அந்த பெண்ணின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசாருக்கு தெரியாமல் அங்கு அந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவியின் உடலை எரித்ததாக அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story