காஞ்சீபுரம், திருவள்ளூரில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், திருவள்ளூரில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், கூட்டுறவு சங்க தேர்தலை முறைப்படி நடத்திடவும் கோரி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் காஞ்சீபுரம் மாவட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் என்.சேரன், மாவட்ட செயலாளர் எம்.கே.சீனிவாசன், பொருளாளர் வி.கோதண்டராமன், கவுரவ தலைவர் எம்.நந்தகோபால் மற்றும் ஏராளமான தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இது தொடர்பான புகார் மனுவை அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் 4 கட்டமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முதல் மற்றும் 2-வது கட்ட தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில் பணியாளர்களுக்கு அரசியல் கட்சியினர்களால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. சங்கங்களை பூட்டுவதும், பணியாளர்களை தாக்கி தரக்குறைவாக பேசுவது போன்ற நடவடிக்கைகளால் பணியாளர்கள் தங்களது பணியை செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனை களைந்து பணியாளர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ரவிசெல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் முனிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கோபால், வடக்கு மண்டல தலைவர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் ஒன்றிய செயலாளர் தர்பாரண்யன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story