கிருஷ்ணகிரியில் விபத்தில் கல்லூரி மாணவி பலி - உறவினர்கள் சாலை மறியல்
விபத்தில் கல்லூரி மாணவி பலியானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் விபத்தில் கல்லூரி மாணவி பலியானதை தொடர்ந்து விபத்துக்கு காரணமான மாணவரையும், பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவரையும் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ரூபினி (வயது 20). இவர் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி பிரிவு 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பண்ணந்தூரைச் சேர்ந்த முனிவேல் (21) என்பவர் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவி வீட்டிற்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்திற்கு அந்த மாணவருடன் மோட்டார்சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் மோட்டார் சைக்கிள் சென்ற போது மாணவர் முனிவேல் திடீரென்று பிரேக் பிடித்தார். இதில் மாணவி ரூபினி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரம் எதிரே வந்த அரசு டவுன் பஸ்சின் பின்புற சக்கரத்தில் மாணவி ரூபினி சிக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாணவியின் உடலை கண்டு கதறி அழுதனர். இதையடுத்து விபத்துக்கு காரணமான மாணவர் முனிவேல் மற்றும் பஸ் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். அந்த பகுதியில் ஏதேனும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் காரணமாக நேற்று கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story