அந்தேவனப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அந்தேவனப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2018 5:00 AM IST (Updated: 7 April 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

அந்தேவனப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர்களின் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதை கண்டித்தும், தேர்வு செய்த 11 உறுப்பினர்களின் பட்டியலை ரத்து செய்து, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வலியுறுத்தியும் தேன்கனிக்கோட்டை பகுதி கமிட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

அந்தேவனப்பள்ளியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாநில குழு உறுப்பினர் நஞ்சப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாதர் சங்க மாநில துணைத் தலைவர் சுந்தரவள்ளி, மாநில குழு உறுப்பினர்கள் பூதட்டியப்பா, பழனி, பேபி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சம்பத், ராஜேந்திரன், நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதை கண்டித்தும், ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Next Story