வேகமாகச் சாப்பிடுபவரா நீங்கள்?
வேகமாக சாப்பிடுவோருக்கு உடல் குண்டாவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கோழி கொறிப்பதைப் போல வேகவேகமாக உணவை விழுங்குவது சிலரின் வழக்கம். ஆனால் வேகமாக உணவு சாப்பிடுவோருக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுவாக, உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும், அதுதான் உடல்நலத்துக்கு நல்லது என்பார்கள். அது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, ஜப்பானைச் சேர்ந்த நிபுணர்கள் 59 ஆயிரத்து 717 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் இரண்டாம் ரக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் 6 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, சாப்பிடும் முறை, மதுப் பழக்கம், தூங்கும் முறை, எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த விவரங்களை அலசியபோது, மெதுவாகச் சாப்பிடுபவர்களைவிட வேகமாகச் சாப்பிடுபவர்கள் குண்டாக இருப்பது தெரியவந்தது.
ஆக, சாலைப் பயணத்தைப் போல சாப்பிடுவதிலும் நிதானம் வேணும்!
Related Tags :
Next Story