மரத்தை மணந்த பெண்கள்!


மரத்தை மணந்த பெண்கள்!
x
தினத்தந்தி 7 April 2018 12:50 PM IST (Updated: 7 April 2018 12:50 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் 100 வயதான மரத்தை வெட்டவிடாமல் தடுக்க அதை இரண்டு பெண்கள் சேர்ந்து திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர்.

மெரிக்கா புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர் கரீன் கூபர். அவரது தோழி தனாபோகில்சங்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் அருகில் 100 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று உள்ளது.

அந்த மரம் அங்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய அதிகாரிகள் அதை வெட்ட முடிவெடுத்தனர்.

இதற்கு அந்தப் பகுதி மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. சுமார் 50 பேர் திரண்டு போராட்டமும் நடத்தினர்.

ஆனாலும் அதிகாரிகள் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்காத நிலையில் கூபரும், தனாவும் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர்.

அதன்படி, அந்த மரத்தை திருமணம் செய்துகொள்ள இருவரும் தயாரானார்கள்.

இரண்டு பெண்களும் மணப்பெண்ணுக்கான ஆடை அணிந்துகொண்டு கேக் கொண்டு வந்தார்கள். மரத்தை திருமணமும் செய்து கொண்டார்கள்.

அதன் பின்னர் கூபர் கூறுகையில், ‘‘இனி யாரும் மரத்தை வெட்டமுடியாது. அப்படி வெட்டினால் நான் விதவையாகி விடுவேன்’’ என்றார்.

மரத்தைக் காக்க புதுமையாகப் போராடும் மங்கையர்! 

Next Story