பாலைவனத்தில் பசுமைப் புரட்சி!


பாலைவனத்தில் பசுமைப் புரட்சி!
x
தினத்தந்தி 7 April 2018 1:14 PM IST (Updated: 7 April 2018 1:14 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் பாலைவனத்தை பசுஞ்சோலைவனமாக மாற்றி வருகிறார்கள்.

லட்சியம், அரசியல் போன்ற காரணங்களால் உலகின் வளமான பகுதிகள் பலவும் வறண்டுவரும் நிலையில், சீனாவில் பாலைவனத்தை பசுஞ்சோலைவனமாக மாற்றி வருகிறார்கள்.

சீனாவின் கான்சூ மாகாணத்தில் உள்ள பாலைவனப் பகுதியில்தான் விவசாயிகள் இப்படி இயற்கையான முறையில் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கான்சூ மாகாணத்தில் உள்ள சுசோகு மாவட்டம், கோபி பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் செய்வது என்பது முடியாத காரியம். குறிப்பாக கோடைக்காலங்களில் இங்கு சூழல் மிகவும் மோசமானதாக இருக்கும். ஆனால் அதை தங்கள் புத்திசாலித்தனமான கடின உழைப்பால் மாற்றி அமைத்து சீன விவசாயிகள் காய்கறிகள், கனிகளை விளைவித்து வருகின்றனர்.

அம்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து பசுமைவீடுகள் மூலம் சாகுபடி செய்திருக்கின்றனர். இங்கு இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வெள்ளரி, தக்காளி மற்றும் சில வகை கனிகள் பயிரிடப்பட்டு உள்ளன.

இங்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் மட்டுமே உரமாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மண்ணின் தரம் மேம்படுத்தப்படுகிறது.

சுசோகு மாவட்டத்தில் மட்டும் சுமார் 800 எக்டேர் அளவுக்கு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதுடன், பாலைவனப் பரவலும் தடுக்கப்படுகிறது.

உலகில் எதுவுமே அசாத்தியமில்லை என்பதற்கு இந்தச் சீன விவசாயிகள் ஓர் உதாரணம்! 

Next Story