மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு
மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களே இவ்வாறு புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
‘இன்டர்ஸ்டிடியம்' என்ற இந்த பாகம், தோலுக்கு அடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்கப் பயன்படுகிறதாம்.
இந்த உறுப்பானது உடலின் அனைத்துப் பாகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. நுரையீரல், ரத்தக்குழாய்கள் மற்றும் தசைகளுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
`இன்டர்ஸ்டிடியம்', உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானது. அதாவது மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி களிடம் சோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனை வரின் உடலிலும் இந்த உறுப்பு இருந்தது.
புற்றுநோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும் என்று கூறும் ஆய்வாளர்கள், புற்றுநோயைக் கண்டுபிடிக்கவும், குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என்கின்றனர்.
Related Tags :
Next Story