காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் வாகனங்களை கட்டணம் செலுத்தவிடாமல் தடுத்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்,
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் வரி கொடுப்பதில்லை என்ற ஒத்துழையாமை இயக்க போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து மதுரையை அடுத்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர், அந்த வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி, சுங்க கட்டணம் செலுத்த வேண்டாம் என தடுத்து, வாகனங்களை விரைவாக செல்ல வழியுறுத்தி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷம் போட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லியும் கேட்காததால், போராட்டம் நடத்தியவர்களை கைது செய்வதாக கூறினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் போது சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் வேகமாக சென்றன. போராட்டம் முடிந்த பின்பும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் கிராமத்தில் தமிழ் தேசிய மக்கள் கட்சியினர் அங்குள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். தகவலறிந்து வந்த ஒத்தகடை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்றதால், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா தலைமையில் வந்த அந்த கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story