திருமாவளவன் உருவப்படம் அவமதிப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனரை கிழித்ததை கண்டித்து தர்ணா
தேவதானப்பட்டி அருகே திருமாவளவனின் உருவப்படம் அவமதிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், அந்த பேனர்களை கிழித்து எறிந்தனர்.
இதேபோல் அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டில், திருமாவளவனின் உருவப்படத்தை அவமதித்து விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் அங்கு திரண்டனர். பின்னர் பெரியகுளம்-தேவதானப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பொம்மிநாயக்கன்பட்டியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கணபதி, தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நிர்வாகி ரபீக் உள்ளிட்டோரும் அங்கு சென்றனர். இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருமாவளவன் படம் அவமதிப்பு மற்றும் பேனர்களை கிழித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜயராமன் என்பவர் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சேக், அஜார், சித்திக், சுல்தான், ஆசிக்பாட்ஷா, சதாம், ஜியாவுதீன், ரகீம் உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story