அரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு புரண்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்


அரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு புரண்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு, புரண்ட உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக்கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஜினிகாந்த். இவர் நேற்றுமுன்தினம் பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு ஓய்வறையில் போதையில் உருண்டு புரண்டார்.

இதுகுறித்து கிராமமக்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி(பொறுப்பு) ஷகிதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) சூரன் ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக வந்துபார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

குடிபோதையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்த் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் 3 மணி நேரம் கழித்தும் அவருக்கு போதை தெளியவில்லை.

இந்தநிலையில் நேற்று மாவட்டக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளி வளாகத்தினுள்ளேயே மது அருந்திவிட்டு போதையில் படுத்திருந்த ஆசிரியரின் செயல் கண்டனத்திற்குரியது என்றார்.

பின்னர் ஆசிரியர் ரஜினிகாந்தை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார். 

Next Story