செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு செல்லும் சிறப்பு ரெயில் நேரம் மாற்றம்
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மதுரை,
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதில் செங்கோட்டையில் இருந்து கோவை செல்லும் ரெயிலின் நேரம் பயணிகளின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து (வ.எண்.06022 ) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. அதிகாலை 4.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் ஜூலை மாதம் 3-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
தற்போது, இந்த ரெயில்(வ.எண்.06022) செங்கோட்டையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 5.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.06021) கோவையில் இருந்து திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. காலை 9.20 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் நாளை(திங்கட்கிழமை) முதல் ஜூலை 2-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரெயில்நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.
அதேபோல, நெல்லையில் இருந்து ஒரு ரெயில் (வ.எண்.06019) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூலை மாதம் 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து (வ.எண்.06020) புதன்கிழமை தோறும் நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. காலை 8.35 மணிக்கு நெல்லை ரெயில்நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் ஜூலை மாதம் 4-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரெயில்நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களில் ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, 6 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Related Tags :
Next Story